வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை - பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் இலங்கை

விசேட மருத்துவநிபுணர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்துள்ளதாலும் ஏனைய சிலரை சர்வதேச பல்கலைகழகங்கள் உள்வாங்குவதாலும் இலங்கையின்சுகாதார துறை நெருக்கடிகளை எதிர்கொள்ளநேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை சமீபத்தில் வைத்தியர்களின் ஓய்வுவயது எல்லையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமும் இதற்கு காரணமாக உள்ளது எனவும் கருத்துக்கள்வெளியாகியுள்ளன.
2024 இல் நாட்டிற்கு 4229 விசேட வைத்திய நிபுணர்கள் தேவை என சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது எனினும் இடமாற்றம் அடிப்படையிலான புள்ளிவிபரங்கள் 750 வெற்றிடங்களை உடனடியாக நிரப்பவேண்டியுள்ளதை புலப்படுத்தியுள்ளன.
இருதயநோய் நிபுணர்கள் நுண்ணுயிரியல் நிபுணர்கள் தோல்நோய் நிபுணர்கள் அவசரகால மருத்துவர்கள் மயக்கவியல் நிபுணர்கள் போன்றவர்களிற்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
அதிகாரிகள் உடனடி நடவடிக்களை எடுக்காவிட்டால் அடுத்த ஆண்டு 1000க்கும் மேற்பட்ட வைத்தியர்களிற்கான தேவை ஏற்படலாம் என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகின்றன.
இலங்கையில் தற்போது 2007 விசேட வைத்திய நிபுணர்களே உள்ளனர் இது பொதுமக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதல்ல எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments: