News Just In

6/04/2023 09:00:00 PM

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்குதலில் ஈடுப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில்



தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அச்சுறுதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்று கோரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை விரைவில் வழங்குமாறு யாழ்ப்பாண பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களுடன் இருந்த போது சில பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதலில் ஈடுப்பட்டவர்கள் நாளை (05.06.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்

No comments: