News Just In

6/10/2023 02:56:00 PM

ஆனி 19இல் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம்





இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பில் உள்ள அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் உள்ளிட்ட ஏனைய அங்கத்தவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்தப்பட்ட இறுதிப் பேச்சுவார்த்தை மற்றும் எதிர்காலச் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: