News Just In

5/28/2023 07:36:00 AM

பிரித்தானியாவின் இரண்டு Storm Shadow cruise ரக ஏவுகணைகளுக்கு ரஷ்ய வான்படை கொடுத்த பதிலடி..!

பிரித்தானியாவின் இரண்டு Storm Shadow cruise ரக ஏவுகணைகளை ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்துள்ளதாக அறிவித்துள்ளன.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், தொலைதூர ஏவுகணைகள் எங்கு இடைமறிக்கப்பட்டன என்பதை விவரிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட குறுகிய தூர HIMARS ரக ஏவுகணை மற்றும் HARM ஏவுகணைகளை இடைமறித்துள்ளதுடன், 19 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குமாறு மேற்கு நாடுகளுக்கு வோலோடிமிர் ஜெலென்க்சி அழைப்பு விடுத்ததை அடுத்து இங்கிலாந்து இந்த மாத தொடக்கத்தில் Storm Shadows ஏவுகணைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: