News Just In

5/29/2023 02:14:00 PM

இலங்கையில் நடைமுறையில் பல இறக்குமதி கட்டுப்பாடுகள்! வலுவடையும் ரூபாவின் பெறுமதி - அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை





இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளில் உரிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை ஆராய்ந்து பாரக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவிசாவளை - தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொருட்களின் விலையில் திருத்தங்கள்

மேலும் தெரிவிக்கையில், இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையை தொடர்ந்து அதற்கு இணையாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் உரிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதனை ஆராய்ந்து பாரக்கவுள்ளோம்.

டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவும், அந்நிய செலாவணியை (சர்வதேச நாணய கையிருப்பு) சீராக பேணுவதற்காகவும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

விவசாயம், கடற்றொழில் மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தற்போது சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

பொருளாதாரம் முன்னேற்றப்பாதையை நோக்கி நகர்வதால் அந்நிய செலாவணி கையிருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும் சில இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அவதானம் செலுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்

No comments: