News Just In

2/10/2023 07:55:00 AM

இலங்கை மக்களுக்கு வெளியான பேரிடியான செய்தி!

இலங்கையில் சேமிப்புக் கணக்கின் வங்கிப் புத்தகத்திலிருந்து ரூ.2 இலட்சத்துக்கும் குறைவாக பணம் எடுத்தால் வணிக வங்கிகள் ரூ.15 முதல் ரூ.50 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கட்டணம் வசூலிப்பதன் மூலம், ஒருவர் வணிக புத்தகத்தை பயன்படுத்தி 50 ரூபாய் தொகையை எடுத்தால், அதற்கு இணையான தொகையை சில தனியார் வணிக வங்கிகள் கூடுதலாக வசூலித்துள்ளன.

இலங்கையில் உள்ள பிரதான தனியார் வர்த்தக வங்கி ஒன்று தற்போது 50 ரூபாவை மேலதிகமாக அறவிடுவதுடன் மற்றுமொரு பிரதான தனியார் வர்த்தக வங்கி 15 ரூபாவை அறவிடுகின்றது.

50 ரூபாய் வசூலிக்கும் தனியார் வங்கியிடம் இது தொடர்பில் கேட்டபோது, ​​2 இலட்ச ரூபாய்க்கு குறைவாக பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் தொகை வசூலிக்கப்படும் என்றும், கார்டு மூலம் டெல்லர் மெஷினில் பணம் எடுத்தால் தொகை இருக்காது என்றும் கூறியது.

கார்டு இல்லாத ஒருவர் மாதம் 10 முறை வங்கிப் புத்தகத்தில் பயன்படுத்தி பணம் எடுத்தால் கூடுதலாக 500 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு ஏழை மக்களுக்கு இழைக்கப்படும் கடும் அநீதி என மக்கள் கூறுகின்றனர்.

No comments: