
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள எல்லைப் புறக்கிராமமான கண்ணபுரத்தில் களுவாஞ்சிகுடி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை(27) ஆயுள்வேத மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர், மற்றும் களுவாஞ்சிகுடி லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள், ஆயுள்வேத வைத்தியர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பல பொதுமக்கள் கலந்து கொண்டு நன்மை பெற்றிருந்தனர்.
இம்மருத்துவ முகாமுக்குரிய நிதி அனுசரணையை களுவாஞ்சிகுடி லயன் கழகத்தின் பொருளாளரும், கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் 306சி பிரிவின் ஆளுநர் சபை உறுப்பினருமான லயன்.ஆனந்தராஜா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: