News Just In

1/05/2023 06:59:00 AM

சி.எம்.டீ தனியார் பல்கலைக்கழக திறப்பு விழாவும் மலேசிய மலாக்கா பல்கலைக்கழக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும்!

கல்முனை சி.எம்.டீ தனியார் பல்கலைக்கழக திறப்பு விழாவும் மலேசிய மலாக்கா பல்கலைக்கழக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் கல்முனை சி.எம்.டீ தனியார் பல்கலைக்கழக நிறைவேற்று பணிப்பாளர்களான எம்.ஏ. நழீர், பீ.எம். நளீம் முஹைதீன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் சி.எம்.டி தனியார் பல்கலைக்கழக தவிசாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கலாநிதி ஏ.எம். ஜெமீலின் தலைமையில் நேற்று (04) கல்முனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் துனியா மலாய் துனியா இஸ்லாம் என்று அழைக்கப்படும் மலாய் இஸ்லாமிக் சர்வதேச செயலகத்தின் தலைவரும், மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநருமான கலாநிதி துன் முஹமட் அலி ருஸ்தாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் மலேசிய மலாக்கா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அப்துல் ரஸாக் இப்ராஹிம் கௌரவ அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும் மலேசிய மலாக்கா பல்கலைக்கழக பதிவாளர், அப்பல்கலைக்கழக உயர் நிர்வாகிகள், இலங்கைக்கான மலேசிய தூதரக அதிகாரிகள், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எம்.எச். அப்துல் சத்தார், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் உட்பட பேராசிரியர்கள், துறைத்தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றம்ஸீன் பக்கீர், இலங்கை மின்சார சபை பிரதம நிறைவேற்று பொறியியலாளர் ஏ.ஆர்.எம். பர்ஹான், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி எம்.சி.எம். மாஹிர், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், சி.எம்.டி தனியார் பல்கலைக்கழக நிர்வாகிகள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை சி.எம்.டீ தனியார் பல்கலைக்கழகத்திற்கும் மலேசிய மலாக்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று சபையோர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

நூருல் ஹுதா உமர், யூ.கே. கால்தீன், எம்.என்.எம். அப்ராஸ்

No comments: