News Just In

1/30/2023 12:57:00 PM

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாணின் விலையும் உயரும் அபாயம் !





மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரிகளின் மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளது என அச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் பேக்கரி தொழில்துறையால் அதனை தாங்கிக்கொள்ளவே முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மா, முட்டை மற்றும் பிற பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக பேக்கரி தொழில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்

No comments: