News Just In

12/18/2022 05:18:00 PM

தமிழினம் அழிவிலிருந்து தப்ப வேண்டுமெனில் தமிழர் தாயகம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் - பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன்




தமிழினம் அழிவின் விளிம்பிலிருந்து தப்ப வேண்டும் என்றால் தமிழர் தாயம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று (18-12-2022) கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் 75 வது ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். காலம் காலமாக தமிழர்கள் மீதான அடக்கு முறைகளும் ஆக்கிரமிப்புக்களும் தெடர்கின்றன.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் தமிழர் தாயகத்தின் மீதான நில ஆக்கிரமிப்புக்கள் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்தல் தொல்லியல் அடையாளங்களை ஆக்கிரமித்தல் அதன் அடையாளங்களை மாற்றுதல் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அழிவின் விளிம்பிலிருந்து தமிழ் இனத்தைபாதுகாக்க வேண்டும் அப்படி என்றால் நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் குறிப்பாக நிர்வாக அலகுகள் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் 75 ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று (18-12-2022) பகல் 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

நிகழ்வின் முன்னதாக விருந்தினர்களை வரவேற்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பாகி நடைபெற்றன.



இதில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் பொதுச்செயலாளர் ப. சத்தியலிங்கம் சசிகலா ரவிராஜ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவனபவன் சாந்தி சிறீஸ்கந்தராஜா இலங்கை தமிழரசு கட்சியின் செயற்பாட்டாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


No comments: