News Just In

12/04/2022 11:15:00 AM

காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து, ஆர்ஜன்டீனா அணிகள் !





உலகக் கிண்ண ஆடவர் கால்பந்தாட்ட தொடரில் சுற்று 16 இல் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

கலீஃபா சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா அணியை நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

நெதர்லாந்து அணி சார்பாக மெம்பிஸ் டிபே, டேலி பிளைண்ட் மற்றும் டென்சல் டம்ஃப்ரைஸ் ஆகியோர் தலா ஒரு கோலை அடிக்க அமெரிக்கா சார்பாக ஹஜி ரைட் ஒரு கோலை புகுத்தினார்.

இதேவேளை அஹமட் பின் அலி மைதானத்தில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் ஆர்ஜன்டீனா அணி அவுஸ்ரேலியாவை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

ஆர்ஜன்டீனா அணி சார்பாக லியோனல் மெஸ்ஸி மற்றும் ஜூலியன் அல்வாரெஸ் ஆகியோர் தலா ஒரு கோலையும் அவுஸ்ரேலியா சார்பாக என்ஸோ பெர்னாண்டஸ் ஒரு கோலையும் புகுத்தினர்.

சுற்று  16 இல் நடைபெற்ற போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் காலிறுதி போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து மற்றும் ஆர்ஜன்டீனா அணிகள் எதிர்வரும் 10 ஆம் திகதி மோதவுள்ளன.

No comments: