News Just In

12/19/2022 07:45:00 AM

புலமைப்பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள சர்ச்சை:எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் நேற்று(18.12.2022) இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கல்கமுவ கல்விப் பிரிவுக்குட்பட்ட எஹெதுவெவ பண்டாரநாயக்க தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் குழுவிற்கு வினாத்தாள் விநியோகத்தின் போது அநீதி இழைக்கப்பட்டதாக பெற்றோர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளனர்.

தற்போது இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன கருத்து வெளியிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை நிலையங்களில் ஆசிரியரினால் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதா என்பது தொடர்பில் இன்றைய தினம்(19.12.2022) அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும்.

கடந்த முறையை விட நேற்று(18.12.2022) புலமைப்பரிசில் பரீட்சை சிறப்பாக நட்டத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், எஹெட்டுவெவ பண்டாரநாயக்க தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் மாணவர்கள் சார்பில் எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கையை எடுப்போம்.

இதேவேளை மாணவர்களுக்கு எவரேனும் அநீதி இழைத்திருந்தமை நிரூபனமானால் அவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.”என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments: