News Just In

12/19/2022 07:29:00 AM

காலத்தின் தேவையால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவன் - சிவநேசதுரை சந்திரகாந்தன்!

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று காலை 10.00 மணியளவில் சங்கத்தின் சிவநேசராசா மண்டபத்தில் நடைபெற்றது. கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் நா.ஜோதிராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வில் பிரதம  விருந்தினராக கலந்துகொண்ட கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தொடர்ந்து பேசுகையில், என்னுடைய எண்ணக்கருவும் எமது மண் உயர்ந்துவிட வேண்டும் என்பதே. எமது மண் வளர்ச்சியடைய வேண்டும், மீட்சியடைய வேண்டும் என்றால் நாம் சிந்திக்க வேண்டும். சிந்தனையூடாக வரும் எண்ணக்கருக்களை செயலாற்ற வேண்டும். இதற்கு அடிப்படையானது கல்வி. கல்விதான் சிந்தனை ஆற்றலை தூண்டும். கற்க கற்க மூளை துரிதமாக செயற்படும். இந்த அடிப்படையில் எமது பாரம்பரியங்களைப்பற்றி நாம் பேசிவந்தாலும் இப்போதுதான் மெல்ல மெல்ல சில மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இது இந்த உலகத்துடன் ஒப்பிடும்போது போதாது!

நாட்டுக்குள் நோக்கும்போது கிழக்கின் வளர்ச்சி மற்றும் மட்டக்களப்பின் வளர்ச்சி போதாது. இருந்தாலும் 1992ம் ஆண்டு மிகச்சவாலான காலத்தில் எமக்கு உள்ள பலவீனங்களை உணர்ந்து இந்த சங்கத்தை இதன் ஸ்தாபகர் ஆரம்பித்து உள்ளார். இதற்கு பலர் உதவியுள்ளனர். இதன் வளர்ச்சி பாராட்டத்தக்கது. இந்த வளர்ச்சி போக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக என்னை அழைத்து பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என்றார்.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களின் உரையுடன் மாணவர்களின் காலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து விளையாட்டிலும், இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.






















No comments: