News Just In

10/23/2022 10:08:00 AM

ஹெரோயின் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்!

உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக போதைப்போருள் பாவனையில் ஈடுபடுபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 22 பேர் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட 22 பேரையும் பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி, அவர்கள் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் எனவும், அதனை ஊசி மூலம் கைகளில் ஏற்றிய அதிக தடயங்களும் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்களில் மூவர் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது. வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 22 இளைஞர்களும் 17 வயது முதல் 31 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவே உள்ளனர்.

No comments: