News Just In

9/19/2022 02:21:00 PM

சுற்றாடல் மேம்பாட்டுக்கு நிதியுதவி வழங்க தென்கொரியா இணக்கம் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சுற்றாடல் துறையுடன் சம்பந்தப்பட்ட சுற்றாடல் மேம்பாடு, கனிய மணல் அகழ்வு போன்றவற்றில் புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு தென் கொரியா நிதியுதவி வழங்க முன்வந்திருப்பதாக இலங்கையின் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தென்கொரியாவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான உபாயங்கள் பற்றிய மாநாட்டில் அமைச்சர் நஸீர் அஹமட்> கலந்து கொண்டு அந்நாட்டின் பிரதி சுற்றாடல் அமைச்சர் யோ ஜேசுல் உடன் இலங்கையில் சுற்றாடல் துறைக்கு உதவி வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அத்துடன் இலங்கை - தென்கொரியா விவசாயிகளுக்கிடையில் பரஸ்பர தொழிநுட்ப மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை பகிர்ந்து கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. சுற்றாடல் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது குறித்தும் ஆர்வம் காட்டப்பட்டது.

மேலும் இத்துறைக்கு ஒத்துழைத்து நிதியுதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதானிகளையும் அமைச்சர் நஸீர் அஹமட் இதன்போது சந்தித்தார். சுற்றாடல்> காலநிலை மாற்றம் மற்றும் இதர திட்டங்களை இலங்கையில் ஆரம்பிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் நிதியுதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், முகவர் நிறுவனங்களுடன் அமைச்சர் நஸீர் அஹமட்;. அங்கு நடாத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக சுற்றாடலுடன் தொடர்புடைய திட்டங்களை நிறைவேற்ற பெருமளவான நிதியுதவிகள் கிடைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் செப்ரெம்பெர் 14 தொடக்கம் 16 வரை ஆசிய பசுபிக் சமுத்திர நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான உபாயங்கள் பற்றிய விவாதிக்கப்பட்டது.


No comments: