News Just In

8/26/2022 06:36:00 AM

சம்மாந்துறை பின்தங்கிய பிரதேச பாடசாலைகளின் மாணவர்களுக்கு கொரிய நிதியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கொரிய சர்வதேச கூட்டுறவு முகவர் (கொய்கா- KOICA) திட்டத்தின் நிதியுதவியுடன் Association of KOICA Fellows (AKOFE) யினால் சம்மாந்துறை கல்விவலய பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கு நிகழ்வு சம்மாந்துறை அல்- அஸ்மான் பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் எம்.ஏ.சி. றஸாக் தலைமையில் நேற்று (25) இடம்பெற்றது.

சம்மாந்துறை பிராந்திய பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய சம்மாந்துறை தாருஸலாம் தேசிய பாடசாலை, சம்மாந்துறை அல்- அஸ்மான் வித்தியாலயம், சது /மல்கம்பிட்டி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் Association of KOICA Fellows (AKOFE) தலைவர் ரொஷான் சேரசிங்க, சிரேஷ்ட உப தலைவர் கவிந்த்ர ஜெயவர்த்தன, செயலாளர் டி. விஜயசிங்க உட்பட நிர்வாக உறுப்பினர்கள், சம்மாந்துறை பிராந்திய பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் யூ.எல். றியால், மல்கம்பிட்டி ஜீ.எம்.எம்.எஸ். பிரதியதிபர் பீ.எம். நினாப், சம்மாந்துறை தாருஸலாம் தேசிய பாடசாலை ஆரம்ப பிரிவு பகுதி தலைவர் எம்.ஐ. அமீர் அலி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்

No comments: