News Just In

7/28/2022 06:29:00 AM

"ஆடி அமாவாசை திருவிழா" இறுவெட்டு வெளியீடு!!

மட்டக்களப்பு, அமிர்தகளி, ஸ்ரீ மாமாங்கேஸ்வரப்பெருமான் மேல் பாடப்பட்ட "ஆடி அமாவாசை திருவிழா" இறுவெட்டு வெளியீடு நேற்றுமுன்தினம் (27) திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு, அமிர்தகளி, ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் மீது மட்டக்ககளப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாக கொண்ட உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன், அவர்களின் பாடல் வரிகளுக்கு தழிழிசை வேங்கை ரீ.எல்.மகராஜன் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்ட ஆடி அமாவாசை திருவிழா இறுவெட்டு வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கலந்துகொண்டு இறுவெட்டினை வெளியீட்டு வைத்துள்ளார்.

அமிர்தகளி, ஸ்ரீ மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் ஆலய வண்ணக்கர் தி.விக்கிரமன் தலைமையில் இடம்பெற்ற இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதனைத் தொடர்ந்து, ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதம குரு ஆதி சௌந்தராஜ குருக்கள் அவர்களின் ஆசியுரையிடன் குறித்த இறுவெட்டு வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வெளியீட்டு நிகழ்வில் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர், முன்னால் வண்ணக்கர்கள், அண்மித்த கிராமங்களின் ஆலய பரிபாலன சபையினர், மட்டக்களப்ப தமிழ் சங்க பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments: