News Just In

4/10/2022 12:37:00 PM

பிரபல இயக்குனர் பாபா விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்!

கலைஞர் கதை, வசனத்தில் "கலைஞரின் கண்ணம்மா" படத்தை இயக்கிய இயக்குனர் பாபா விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் தற்போது இமான் அண்ணாச்சி நடிப்பில் "அதிர்ஷ்டம்" என்ற படத்தை தயாரித்து இயக்கி வந்தார்.

உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த பாபா விக்ரம் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் தனது மனைவி லட்சுமி, மகள் கண்ணம்மா ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் திடீரென்று மரணம் அடைந்துள்ளார். இந்த தகவல் அறிந்த திறையுலகம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.

No comments: