News Just In

3/15/2022 06:41:00 AM

ரஷ்ய - உக்ரேன் போர்க்கள தற்போதைய நிலவரம்!

உக்ரேனில் ஒரு சில ஊர்களில் நடைபெற்ற ரஷ்யாவின் தாக்குதல்கள் தற்போது 67 ஊர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பெரிய ஊர்களில் மட்டுமன்றி சிறிய ஊர்களிலும் தனது தாக்குதலை ரஷ்ய ராணுவம் விரிவுபடுத்தியுள்ளது.

500Km தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் 'ஸ்கந்த' ஏவுகணைகளை ரஷ்ய ராணுவம் வீசுகின்றது. கருங்கடல் பகுதியில் தரித்து நிற்கும் போர்க்கப்பலில் இருந்தும் ஏவுகணைகள் வீசப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 203mm விட்ட சுடுகுழல் கொண்ட 'பினோ' என பெயரிட்ட பீரங்கி 'காயசின்' என பெயரிட்ட 152mm விட்ட சுடுகுழல் பீரங்கிகளையும் ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதாக தகவல்கள் கூறுகின்றது.

ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தும் உக்க்ரேனின் விமானத் தளங்களை குறிவைத்து தாக்குகிறது ரஷ்யா. இதுமட்டுமன்றி B1-21 ரக ரொக்கெட் ஏவும் பீரங்கிகளையும் போர்க்களத்தில் ரஷ்யா பயன்படுத்துகிறது.

சோயித்ரக தாங்கிகள், பீரங்கிகள் கொண்ட ரஷ்யாவை உக்ரேன் எதிர்கொள்வதாக தகவல்கள் கூறுகின்றது. சோவித் தயாரிப்பான "ரொக்சோ-u" குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி ரஷ்ய பீரங்கிகளை தவிடுபொடியாக்குகிறது உக்ரேன்.

அமெரிக்கா வழங்கிய 'ஜவலின்' ரக ஏவுகணை மற்றும் தோழில் வைத்து சுடும் 'சிறிஞ்சர்' ரக ஏவுகணை மூலம் ரஷ்ய படைகளை உக்ரேன் எதிர்கொள்கிறது. மேலும் துருக்கி வழங்கிய ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் ரஷ்ய படைகளின் அணிவகுப்பை தாக்குகிறது உக்ரேன். பிற நாட்டு ஆயுதங்களுடன் உள்நாட்டு ஆயுதங்களையும் பயன்படுத்தி காலத்தில் நிற்கிறது உக்ரேன்.

No comments: