7 ஆயிரம் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரு கப்பல்கள் இன்னும் மூன்று நாட்களில் இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த இரண்டு கப்பல்களிலும் உள்ள எரிவாயு இறக்கப்பட்ட பின்னர் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டு பிரச்சினை தீரும் எனவும் அவர் கூறினார்.
கடந்த நாட்களில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் சிலிண்டர் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது. அத்துடன் கடந்த 2 மாதங்களில் 15 லட்சம் சிலிண்டர்கள் குறைவடைந்ததால் வரிசைகள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த கப்பல்கள் வருவதனால் இனி அந்த நிலை ஏற்படாது என்றும் அவர் மேலும் கூறினார்.
No comments: