News Just In

3/14/2022 09:21:00 AM

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ள மருத்துவபீட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களில் மருத்துவப்பீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே 2020ஆம் ஆண்டு உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 1974 மாணவர்கள் மருத்துவபீடங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக 110 மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் சிரேஷட பேராசியருமான சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2018ஆம் ஆண்டு 1480 மாணவர்கள் மருத்துவபீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்டதுடன், 2019 ஆம் ஆண்டு 1961 மாணவர்கள் உள்வாங்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியவர்களிலிருந்து 43500 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.





Share

No comments: