News Just In

3/22/2022 08:56:00 PM

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதமொன்று வழங்கப்படவுள்ளது!

இலங்கையில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதமொன்று வழங்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய கடிதமொன்று விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க (Viyani Gunathilaka) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தேசிய அடையாள அட்டைக்குப் பயன்படுத்தப்படும் அட்டையை சிக்கனப்படுத்தும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் குறித்த கடிதம் செல்லுபடியாகும்.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் கடிதம் விநியோகிக்கப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: