News Just In

3/14/2022 08:47:00 PM

காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை 3 மடங்கினால் அதிகரிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அச்சிடுவதற்கான காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம் காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை 3 மடங்கினால் சந்தையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் புத்தக வெளியீட்டாளர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் , சந்தையில் காகிதங்களின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.

அத்துடன் பேனை மற்றும் பென்சில் ஆகியவற்றின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் விற்பனையாளர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்தின் அச்சக பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச அச்சகத்தினர் சங்கத்தின் ஆலோசகரும், முன்னாள் செயலாளருமான அதுல இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

காகித தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் அதிவிசேட வர்த்தமானியோ அல்லது சாதாரண வர்த்தமானியோ வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும்.

மேலும் அபராத சீட்டை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்படும் நிலையில், அதனால் அரசாங்கத்திற்கான வருமானமும் இல்லாது போகும் என அரச அச்சகத்தினர் சங்கத்தின் ஆலோசகரும், முன்னாள் செயலாளருமான அதுல குறிப்பிட்டுள்ளார்.

No comments: