News Just In

12/07/2021 06:13:00 AM

பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பிரியந்தவின் சடலம்!

பாகிஸ்தானின் சியல்கோர்ட் நகரில் அடித்துக்கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவதனவின் சடலம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் சியல்கோர்ட் நகரில் தொழிற்சாலை முகாமையாளராக பணியாற்றி வந்த 48 வயதான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடல் எரியூட்டப்பட்டது.

இந்நிலையில்,பாகிஸ்தான் லாகூ​​ரியிலிருந்து புறப்பட்ட யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் அவரது உடலை தாங்கிய பேழை நேற்றுமுன்தினம் மாலை 5.10 மணியளவில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் நீர்கொழும்பு நீதித்துறை விசேட வைத்திய நிபுணர் டாக்டர் இளங்கரத்ன மற்றும் குருநாகல் நீதி வைத்திய அதிகாரி அஜித் ஜயசிங்க ஆகியோரினால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் பிரியந்தவின் சடலம் உறவினர்களிடம் அஞ்சலிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

No comments: