News Just In

11/27/2021 07:39:00 AM

உலகெங்கும் பேரெழுச்சியடையும் 'மாவீரர் நாள்' : சிறிலங்காவில் நெருக்கடி

கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் இரண்டாவது வருடமாக உலகப்பரப்பை மாவீரர் நாள் இன்று கடக்கவுள்ளது.

தாயகத்தைப் பொறுத்தவரை பல பகுதிகளில் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தின் நெருக்கடிக்கு மத்தியில் மாவீரர்தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. புகலிட நாடுகளை பொறுத்தவரை நிகழ்வுகளுக்கான தயார்படுத்தல்கள் மும்முரமாக இடம்பெற்றுவருவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடம் கொரோனா தொற்று மீண்டும் வீரியமடைந்துள்ள நிலையில் அதற்குரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

குறிப்பாக நிகழ்வுகளில் பங்கெடுக்க வருபவர்கள் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிய சான்றிதழ்கள் அல்லது எதிர்மறை சோதனை அறிக்கையுடன் வருவது உசிதம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாயகத்தில் சில துயிலும் இல்லங்களுக்கு அருகாமையில் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளது. எனினும் எந்தவித அச்சமும் இன்றி மரணித்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என ஏற்பாட்டளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை, மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments: