News Just In

11/27/2021 08:51:00 AM

தென்னாபிரிக்கா கோவிட் மாறுபாடு கொண்ட வைரஸ் பரவிய நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை!

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு பரவிய நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய அந்த நாடுகளில் உள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் இலங்கைக்கு வருவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா, அங்கோலா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், லெசோதோ, சிம்பாப்வே, சுவிட்ஸர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த தடை பொருந்தும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அந்த நாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கு புறப்பட்டிருந்தால் அவர்களை தனிமைப்படுத்துவதற்கு அனுப்புமாறு சுகாதார அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

தென்னாபிரிக்கா கோவிட் மாறுபாடு கொண்ட வைரஸ் பரவிய நாட்டவர்கள் பிரித்தானியா, ஜப்பான், ஜேர்மனி, இத்தாலி, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments: