News Just In

11/27/2021 07:22:00 AM

இலங்கையர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்!

கொரோனாவுக்கான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் தமது நாட்டுக்குள் பிரவேசிக்கலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

அத்துடன் அடுத்த மாதம் மேலும் ஆறு நாடுகளுக்கு இதனை விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன்படி டிசம்பர் 14 முதல், தாய்லாந்தில் இருந்து பயணிகள் தனிமைப்படுத்தப்படாது சிங்கப்பூருக்குள் நுழையலாம். கம்போடியா, பிஜி, மாலைதீவு, துருக்கி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இது டிசம்பர் 16 முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: