News Just In

10/29/2021 07:50:00 AM

முன்பள்ளிகள் திறக்கப்படும்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் முன்பள்ளி பாடசாலைகள் மீள திறக்கப்படும்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

கொவிட்19 தொற்று அதிகரிப்பு காரணமாக கடந்த 06 மாதங்களாக மூடப்பட்டிருந்த முன்பள்ளி பாடசாலைகள் மீள திறக்கப்படும் பட்சத்தில் சிறுவர்களும் ஆசிரியர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பவற்றை பேண வேண்டும். இதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் முன்பள்ளி பொறுப்புதாரிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.அடிக்கடி கை கழுவுவதோடு, மலசலகூடங்களை துப்புரவாக வைத்திருப்பதோடு, போதியளவு நீர் மற்றும் சவர்க்காரம் என்பன வைக்கப்படல் வேண்டுமெனவும் அறிவித்துள்ளார். 

கொவிட்19 தொற்று முற்றாக எம்மை விட்டு இன்னும்  நீங்கவில்லையெனவும் இக்காலகட்டத்தில் எல்லோரும் பொறுப்படன் செயற்பட வேண்டுமெனவும் மீள திறக்கப்படும் முன்பள்ளி பாடசாலைகள் சுகாதாரப் பகுதியினர் பரிசோதனை செய்யவுள்ளதாகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுள்ளார்.

தற்போது கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுவதால் முன்பள்ளி பாடசாலைகளின் சுற்றுப்புறச் சூழலை டெங்கு நுளம்பு பரவாமல் இருப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

No comments: