News Just In

8/27/2021 07:27:00 AM

இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு காரைதீவிலும் நடைபெற்றது...!!


(நூருல் ஹுதா உமர்)
கொரோனா அனர்த்த நிலைமையை முன்னிட்டு இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டமானது இன்று அம்பாறை மாவட்டத்தில் முதற்கட்டமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டமானது காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தலைமையில் ஆரம்பமானதுடன் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இன்று காரைதீவு பகுதிகளில் வீடு வீடாகச்சென்று இத்தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர். இந்நடவடிக்கையை கண்காணிப்பதற்காக 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரியும், கல்முனை பிராந்திய இராணுவ மேஜர் சாந்த விஜேயகோனும் சம்பவ இடங்களுக்கு வருகை தந்து பார்வையிட்டனர். காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நடமாடும் தடுப்பு மருந்தேற்றல் செயற்திட்டமானது இரானுவத்தினரின் பங்களிப்புடன் வீட்டுக்கு வீடு வழங்கப்படவுள்ளதனால் இது வரையிலும் கொவிட் தடுப்பு மருந்து ஏற்றிக்கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் உடனடியாக தங்களின் விபரங்களை தமக்குரிய கிராம சேவகரிடம் வழங்குவதன்மூலம் இச்சேவையினை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தெரிவித்தார்.





No comments: