News Just In

6/18/2021 07:52:00 PM

திருகோணமலை- மூதூர் மத்திய கல்லூரி அதிபர் நியமனம் முதல் பொலிஸ் முறைப்பாடு வரை இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள விளக்கம்...!!


திருகோணமலை- மூதூர் மத்திய கல்லூரி அதிபர் நியமனமும், கடந்த 2021.06.11திகதி முதல் 2021.06.13ஆம் திகதி வரையிலும் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் பாடசாலை அபிவிருத்திக் குழுவும், பழைய மாணவர்கள் சங்கமும் இணைந்து உத்தியோகப்பூர்வ அறிக்கை ஒன்றை கடந்த 2021.06.16 திகதி இரவு 10.42 மணிக்கு வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த அறிக்கை தொடர்பில் மூதூர் மக்கள் சபை தவிசாளரும் சமாதான நீதிவானுமாகிய தேசபந்து அத்யாபன கீர்த்தி ஏ.ஆர்.இத்ரீஸ் அவர்கள் விடுதிட்டுள்ள விளக்க அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,

அதிகமான பெற்றோர்கள்,பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் தொலைபேசி மூலம் அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் உண்மையா? என்றும், அல்லது பொய்யா? என்றும் பொய்யாக இருந்தால் உண்மையை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் அத்தியாவசிய கடமையில் இருந்ததால் சமூக வலையத்தளத்தை இன்றுதான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்த அறிக்கை மூலம் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் உண்மையானவையாக இருக்கின்றன. ஆனால் அதிகமான விடயங்கள் உண்மைக்கு புறம்பானதாக இருக்கின்றன. இதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பில் நாங்கள் இருக்கின்றோம்.

1. தற்போதைய பாடசாலை அபிவிருத்திக் குழுவும்,பழைய மாணவர் சங்கமும் இணைந்து முன்னாள் அதிபர் ஜனாப்.ஏ .எச்.எம்.பஷீர் ஐயா அவர்களின் சகல செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி பாடசாலையின் வளர்ச்சிக்காக செயற்பட்டமைக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

2. மூதூர் மத்திய கல்லூரியில் நிலவிய அதிபர் வெற்றிடத்திற்கு பொருத்தமான அதிபரை நியமிக்க கல்வி அமைச்சினால் ஒவ்வொரு முறையும் விண்ணப்பம் கோரப்பட்டது. இதற்கு முன்னரும் விண்ணப்பம் கோரப்பட்ட போது மூதூரிலிருந்து இலங்கை அதிபர் சேவை தரம் -1ஐ சேர்ந்த ஜனாப். எஸ்.எம்.உவைஸ் ஐயா அவர்களும் விண்ணப்பித்து நேர்முகப்பரீட்சைக்கும் தொற்றினார்கள். அவர் தெரிவு செய்யப்படக்கூடிய நிலையில் அந்த நேர்முகப்பரீட்சை இரத்துச்செய்யப்பட்டது.

3. மீண்டும் 2021ஆம் ஆண்டு அதே அதிபர் வெற்றிடத்திற்கு பொருத்தமான அதிபரை நியமிக்க விண்ணப்பம் கோரப்பட்டது. அப்போது விண்ணப்பபடிவத்தை பூரணப்படுத்த முன்னர் தற்போதைய அதிபர் ஜனாப்.எஸ்.ஏ.முஹீர் ஐயா அவர்கள் முன்னாள் அதிபர் ஜனாப்.ஏ.எச்.எம்.பஷீர் ஐயா அவர்களை சந்தித்து அதிபர் வெற்றிடத்திக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது நான் விண்ணப்பிக்கவுள்ளேன் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று கேட்டுள்ளார், அதற்கு ஜனாப்.பஷீர் ஐயா அவர்கள் நீங்கள் விண்ணப்பியுங்கள் உத்தியோகபூர்வமாக அதிபராக நியமிக்கப்பட்டால் நான் பாரம் தந்து விட்டு போறேன் என்று கூறியுள்ளார். பிறகு ஜனாப்.முஹீர் ஐயா நான் அதிபராக வருவதால் ஏதும் முரண்பாடுகள் இருக்குமா அவ்வாறு இல்லாமல் இருக்க நீங்கள் போகும் வரைக்கும் நான் பிரதி அதிபராக இருக்கின்றதாக இருந்தாலும் பரவாயில்லை கதைத்து முரண்பாடு வராமல் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார். அதற்கு மீண்டும் பஷீர் ஐயா முன்னர் கூறியதையே மீண்டும் கூறியுள்ளார்.

4. ஜனாப்.முஹீர் ஐயா விண்ணப்பித்தமைக்கு இணங்க நேர்முகப்பரீட்சைக்கு கடிதம் கிடைத்தது அதனை பாடசாலை அபிவிருத்தி குழுவும், பழைய மாணவர்கள் சங்கமும் கேள்விப்பட்டு பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் ஜனாப்.தாபித் அவர்களும், பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக ஜனாப்.பைஸாத் மற்றும் ஜனாப்.ஜஸுரூன் அவர்களும் ஜனாப் .முஹீர் ஐயா அவர்களின் வீட்டுக்கு சென்று நாங்கள் ஜனாப். பஷீர் ஐயா அவர்களை கெளரவிக்க இருக்கின்றோம் அதே போன்று நூற்றாண்டு விழாவும் நடாத்த இருக்கின்றோம் நீங்கள் நேர்முகப்பரீட்சைக்கு போகக்கூடாது என்றும் வேறு யார் போக இருந்தாலும் அவர்களையும் போக விடாமல் தடுப்போம் என்றும் கூறியுள்ளார்கள். அதற்கு ஜனாப்.முஹீர் ஐயா அவர்கள் நான் நேர்முகப்பரீட்சைக்கு தோற்ற வேண்டியது எனது உரிமை, நான் தோற்றாவிட்டால் காரணம் கொடுக்க வேண்டும் அதனால் நான் தொற்றுவேன் நீங்கள் தோற்ற வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.

5. பின்னர் ஜனாப் முஹீர் ஐயா அவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய போது நேர்முகப்பரீட்சை நடாத்திய அதிகாரிகளிடம் ஜனாப்.பஷீர் ஐயாவின் நிலைப்பாட்டையும், பாடசாலை அபிவிருத்திக் குழுவினதும், பழைய மாணவர்களினதும் நிலைப்பாட்டையும் எடுத்துக் கூறியுள்ளார். அதற்கு நேர்முகப்பரீட்சை நடாத்திய அதிகாரிகள் கேட்டுள்ளார்கள் அதிபரா இருக்க விருப்பமா விருப்பமில்லையா என்று அதற்கு ஜனாப்.முஹீர் ஐயா தனக்கு விருப்பம் என்றும் ஜனாப்.பஷீர் ஐயா போகும் வரைக்கும் அவர் அதிபராக இருக்கவும், தான் பிரதி அதிபராகவும் இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார் அதற்கு அவ்வதிகாரிகள் ஜனாப்.முஹீர் ஐயாவிடமும், ஜனாப்.பஷீர் ஐயாவிடமும் ,பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தினதும் கடிதங்களை எடுத்து அனுப்பும்படி ஜனாப் முஹீர் ஐயா அவர்கள் ஜனாப்.தாபித் அவர்களை சந்தித்து கடிதத்தை கேட்டுள்ளார். அதனை அவர் கணக்கெடுக்கால் இருந்துள்ளார். இவர் எங்க அதிபரா வரப்போறார் என்ற தப்பான நினைப்பாகவும், வேறு உள்நோக்கமாகவும் இருந்து இருக்கலாம். நாங்கள் ஊகிப்பதில் நியாயமுள்ளது. .

6. ஜனாப்.முஹீர் ஐயா அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர் அதனை என்னால் பதிவிடப்பட்டது. 2021.06.14ஆம் திகதி கடமைப்பொறுப்பேற்கவுள்ளார் என்று. அதனை தொடர்நது பாடசாலை அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்களும்,பழைய மாணவர் சங்க சில உறுப்பினர்களும் தற்போதைய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் பாடசாலை மாணவர் விடுதியிலும், மற்றும் ஒரு சில உறுப்பினர்களின் வீட்டிலும் இரகசிய கூட்டங்கள் கூடி பல பிழையான முடிவுகளை எடுத்துள்ளார்கள் என்பதனை சமூக வளையத்தள மூலம் அறியக்கிடைத்தது. அதனைத் தொடர்ந்து. உடனே ஜனாப்.தாபித் அவர்கள் என்னுடன் தொலைபேசி எடுத்து உரையாடிய வேளையி யிலும் அதனை உறுதிப்படுத்தினார்.அதன் பின்னர் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஜனாப்.எம்.எஸ்.கஸ்ஸாலி அவர்களை இரவோடு இரவாக சந்தித்து கடிதம் கேட்டதிலிருந்தும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

7.அதன் பின்னர் சில ஆசிரியர்கள் எங்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாங்களும் ஜனாப்.முஹீர் அதிபர் அவர்களுடன் கதைத்த பின்னர் ஜனாப்.தாபித் அவர்கள் எனக்கு தொலைபேசி எடுத்து கதைத்தார். அப்போது நான் கூறினேன் ஜனாப்.முஹீர் ஐயா உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட அதிபர் அவரிடம் அதிபருக்கான கையொப்ப அதிகாரம் உட்பட அதிபருக்கான அதிகாரங்கள் இருக்கும், ஜனாப்.பஷீர் ஐயா பாரம் கொடுத்து விட்டு போகத்தேவை இல்லை. அவருக்கும் அதே அறையில் ஆசனம் போட்டு கொடுத்து நிருவாக நடவடிக்கைகளை புதிய அதிபருடன் சேர்ந்து செய்து நூற்றாண்டு விழாவையும் செய்து விட்டு அவர் கெளரவிக்கப்பட்டு ஓய்வு பெறலாம். அதற்கு ஜனாப்.தாபித் அவர்கள் கதைத்து விட்டு 2021.06.12ஆம் திகதி (சனிக்கிழமை) மாலை.04.00மணிக்கு அறிவிப்பதாக என்னிடம் தெரிவித்தார் இன்று வரைக்கும். அது சம்பந்தமாக எதுவும் என்னிடம் கதைக்கவில்லை.

8.பின்னர் 2021.06.13ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 11.00மணியளவில் ஜனாப்.தாபித், ஜனாப்.ஜசுருண் மற்றும் ஜனாப் அஹ்ஸான் அவர்களும் அதிபர் ஜனாப்.முஹீர் ஐயா அவர்கள் வீட்டுக்கு சென்று 03நிபந்தனைகள் விதித்து எதனை ஏற்றுக்கொள்கின்றீர்களோ அதனை அன்றைய தினம் மாலை 04.00மணிக்கு முன்னர் எழுத்து மூலம் தரவேண்டும் என்று.

அந்த நிபந்தைகள்
i. நீங்கள் பிரதி அதிபராக இருக்க வேண்டும் ஜனாப் பஷீர் ஐயா ஓய்வு பெறும் வரைக்கும்.

ii.நீங்கள் அதிபராக இருந்தால் ஜனாப்.பஷீர் ஐயாவை பிரதி அதிபராகவா வைப்பிங்கள்.

iii.பூரணமான அதிபராக நீங்கள் இருந்து ஜனாப்.பஷீர் ஐயா வெளியேற வேண்டுமா ?

9. இதன் பின்னர் இந்த நிபந்தை விதித்து கதைத்த முறையில் நாளைக்கு கடமைப்பொறுப்பேற்கும் போது எதாவது இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்ற நினைத்து ஜனாப்.முஹீர் ஐயா அவர்கள் தற்பாதுகாப்புக்காக பொலிஸில் முறைபாடு ஒன்றை வழங்கியுள்ளார். பின்னர் எல்லாம் சுமுகமாக முடிவு பெற்றதனால் முறைப்பாட்டை மீளப்பெற்றுக்கொண்டுள்ளார்.
மேற்படி என்னால் குறிப்பிட்ட விடயங்கள் அணைத்து எனது அறிவுக்கெட்டிய வரையில் உண்மை என்றும்,அது பொய்யாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கலாம் என்றும் அவர் தனது விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments: