News Just In

6/15/2021 04:59:00 PM

சேதன விவசாய உர உற்பத்தியை வலுவூட்டும் வேலைத்திட்டம் சம்மாந்துறையில் முன்னெடுப்பு...!!


சம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்)
நாட்டின் விவசாயத்துறையில் முழுமையாக சேதன உரப் பயன்பாட்டை கொண்டுவருவது நோக்கில் சனாதிபதி அவர்களால் “சுபீட்சத்தின் நோக்கு“ தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக நாடு தழுவிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

"தேர்தல் காலங்களில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப செயற்படுவது ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அந்த வகையில் முந்தைய அரசாங்கங்கள் சேதன உரப் பயன்பாட்டை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அதைத் தொடர்ச்சியாக நடைமுறை படுத்த முடியவில்லை.

அது சவாலான கடினமான பணியாக பார்க்கப்பட்டது; எனினும் சரியான மூலோபாயத்தை அடையாளம் கண்டு நாட்டுக்காக கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்" என்று ஜனாதிபதி அவர்களினால் வலியுத்தப்பட்டிருந்தது அதற்கமைய சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஓர் பகுதியில் விவசாயி ஜி.எம் சித்தீக் அவர்களினால் சேதன உரம் (கம்போஸ்ட் உரம்) தயாரிக்கும் முயற்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனை பார்வையிட சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் சம்மாந்துறை மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையங்களுக்கான நிலைய பொறுப்பதிகாரி எம்.டி.எ கரீம் உள்ளிட்ட விவசாய போதனாசிரியர் எம் ரீ எம் . நளீர், தொழிநுட்ப உதவியாளர் ஏ.ஜீ.எம். ரிபாஷ் உள்ளிட்ட குழு சென்று சேதன உர உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கான மேலதிக ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

முற்று முழுதாக விவசாய போதனாசிரியர்களின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பாரிய அளவில் சேதன பசளை உற்பத்தி செய்யவிருப்பதாக சம்மாந்துறை மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையங்களுக்கான நிலைய பொறுப்பதிகாரி எம்.டி.எ கரீம் தெரிவித்தார்.








No comments: