நான்கு நண்பர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள போது முன்னால் பயணித்த உழவு இயந்திரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புஸ்ஸ ரேஜ்ஜிபுர பிரதேசத்தை சேர்ந்த இஷான் சாலிங்க என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெலிகட பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்தில் மோதி அருகில் இருந்து மின் கம்பத்திலும் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், விபத்தில் ஏனைய மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: