News Just In

2/15/2021 08:21:00 PM

மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் 2021 ஆண்டுக்கான பொங்கல் விழாநிகழ்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஸ்ரீ ஆலயடி பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனாவைரஸ் தொற்றின் காரணமாக பொதுமக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பிரதேச செயலகங்கள் மட்டத்தில் நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா நிகழ்வுகள் பிரதேச செயலக கலாசார பிரிவுடன் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஸ்ரீ ஆலயடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் இணைந்துசத்துருக்கொண்டான் ஸ்ரீ ஆலயடி பிள்ளையார் ஆலயத்தில் நடாத்தப்பட்டது

உதவிபிரதேச செயளாளர் ஜி .அருணன் தலைமையில் சடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சத்துருக்கொண்டான் ஸ்ரீ ஆலயடி பிள்ளையார் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

நடைபெற்ற கலாசார பொங்கல் விழா நிகழ்வானது பாரம்பரிய கலாசாரத்தை முன்னிலைப்படுத்தி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பா .செ . சிறிஸ்கந்தராசக் குருக்கள் தலைமையில் ஆலயமுன்றலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரியனுக்கு நன்றி செலுத்தி ஆலயத்தில் விசேட தீபாராதனை பூஜை வழிபாடுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.







No comments: