மட்டக்களப்பு செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கும் நிகழ்வு செங்கலடி பழையஊர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கனடா வாழ் உறுப்பினர்களின் நிதியுதவியில் செங்கலடி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 85 மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கப்பட்டன.
கோல்ட் விளையாட்டுக் கழக தலைவர் சி.முரளிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் திருமதி கே.சங்கீதா, பழையஊர் முத்துமாரி அம்மன் ஆலய தலைவர் தி.சுதேஸ்கரன், கிராம அபிவிருதித்திச் சங்க தலைவர் ந.லோகிதராசா மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.






No comments: