News Just In

2/15/2021 08:34:00 PM

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலைகளுக்கு சீருடை துணிகள் விநியோகம்!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வரும் இலவச சீருடை துணிகள், நாடளாவிய ரீதியாக விநியோகிக்கப்பட்டு வருகிறன.

அந்தவகையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலைகளுக்கு இலவச சீருடை துணிகள், பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் தலைமையில், பாடசாலை அதிபர்களிடம் சீருடை துணிகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: