News Just In

2/15/2021 07:53:00 PM

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உட்பட ம்பொலிஸ் அதிகாரிகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் மட்டக்களப்பிலுள்ள 14 பொலிஸ் நிலைய பொறுப்பதிகரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்று சனிக்கிழமை (13) கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

பாதுகாப்பு படையினருக்கு தடுப்பூசி எற்றும் நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிசாருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்தவாரம் ஆரம்பிக்கப்பட்டு பகுதிபகுதியாக இடம்பெற்றுவருகின்றது

இதனடிப்படையில்; இன்று கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு பொலஜஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பல பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.





No comments: