News Just In

2/17/2021 07:52:00 PM

பிரித்தானியாவிற்கான இலங்கை அரசாங்கத்தின் பயணத்தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டது!!


இலங்கை அரசாங்கத்தினால் பிரித்தானியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத்தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புதிய கொரோனா வைரஸ் பரவல் அடையாளம் காணப்பட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் பயணத்தடையினை விதித்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடனான கலந்துரையாடலின் பின்னர் குறித்த தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் வழிகாட்டல்களின் அடிப்படையில் பிரித்தானியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் மீண்டும் நாட்டுக்கு வருகைத்தருவார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: