News Just In

2/17/2021 02:42:00 PM

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 832 இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!!


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மூலம் 24 விமானங்கள் ஊடாக ஆயிரத்து 477 பேர் பயண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணித்தியால காலப்பகுதிக்குள் குறித்த பயண நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த காலப்பகுதிக்குள் வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 832 பேர் 10 விமானங்களினூடாக நாட்டை வந்தடைந்தாக விமான நிலைய கடைமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த நிலையில் தொழில் வழங்குனர்களினால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்த 389 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலிருந்து எதிஹாட் விமானசேவைக்கு சொந்தமான E Y 264 இலக்க விமானம் ஊடாக 238 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து ஶ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான U L 226 இலக்க விமானம் ஊடாக 151 பேர் இன்று அதிகாலை 4.55 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மேலும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 97 பேரும், கட்டார் – தோஹாவிலிருந்து 79 பேரும், சிங்கப்பூரிலிருந்து 45 பேரும், நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த அனைவரும், தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் அரசாங்கத்தின் விசேட வேலைதிட்டத்திற்கமைய அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அனைவரும் முப்படையினரால் நடாத்திசெல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் 645 பேர் 14 விமானங்களினூடாக பல்வேறு தேவைகளின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 177 பேரும், பங்களாதேஷிற்கு 90 பேரும் பல்வேறு தேவைகளின் நிமித்தம் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: