News Just In

12/23/2020 05:03:00 PM

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிக்க நடவடிக்கை!!


தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த செயற்பாட்டுக்கு தேவையான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் வாரத்தில் உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் இணைந்து இந்த விடயம் தொடர்பில் முடிவுக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: