News Just In

7/22/2025 01:38:00 PM

காணியை விட்டு வெளியேறவும்; யாழ் தையிட்டி விகாரதிபதிக்கு பறந்த கடிதம்

காணியை விட்டு வெளியேறவும்; யாழ் தையிட்டி விகாரதிபதிக்கு பறந்த கடிதம்



யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும், தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

தையிட்டியில் உள்ள தனது காணியில் அடாத்தாக சட்டவிரோத கட்டடம் ஒன்றினை அமைத்து வருவதாக எமக்கு ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

எனவே முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ள காணியில், தங்களுக்கு சட்ட ரீதியான உரித்து காணப்பட்டால், அவற்றுக்கான ஆவணங்களை பிரதேச சபையில் சமர்ப்பிக்கவும்

அவ்வாறு இல்லாத பட்சத்தில் உடனடியாக அக்காணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் தவறின் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தரமா தேரோவிற்கு தவிசாளர் சோ. சுகிர்தன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

No comments: