News Just In

7/21/2025 08:00:00 AM

அசாத் மௌலானா - இனியபாரதி - மேஜர் ஜெனரல் கபிலவின் இரகசிய சந்திப்பு தொடர்பில் அதிரும் விசாரணை

அசாத் மௌலானா - இனியபாரதி - மேஜர் ஜெனரல் கபிலவின் இரகசிய சந்திப்பு தொடர்பில் அதிரும் விசாரணை


முன்னாள் அரச புலானாய்வுதுறையின் தலைவராக இருந்த நிலந்த ஜயவர்த்தன பதவியிலிருந்துநீக்கப்பட்டுவிசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

2019 இல் இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் நடவடிக்கைஎடுக்கதவறியதன்விளைவாகஇவர்கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் அண்மைகால விசாரணைகளில் கிடைக்கப்பெற்றிருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முக்கிய சாட்சியான அசாத் மௌலானா உட்பட்ட பலரை அழைத்து வருவதற்கான இராஜதந்திர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2018 செப்டெம்பர் மாதமளவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயவின் வாசஸ்தலத்தில் சுரேஸ் சாலே ஒரு முக்கிய சந்திப்பினை முன்னெடுத்ததாகவும் அதில் இனிய பாரதி உட்பட்ட மூவரும், அசாத் மௌலானா, மற்றும் முன்னாள் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் கபில ஆகியோர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான முக்கிய ஆதாரங்கள் இல்லாமல் இலங்கை புலனாய்வுதுறை திணறிக்கொண்டிருக்கின்றது.

No comments: