திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் கடந்த 11,12,13 - 07 - 2025 ம் திகதிகளில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க சுற்றுப் போட்டியில் ஆண்களுக்கான இரண்டு பிரிவுகளிலும் முதல் நிலையை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு சாதனை வரலாற்றை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மீண்டும் புதுப்பித்துள்ளது.
மேலும் நடைபெற்ற போட்டிகளில் தனியாள் வாரிய சாம்பியன் (Board Champion) ஆக கல்முனை சாஹிரா (தேசிய பாடசாலை) கல்லூரின் 17 வயதுக்கு உட்பட்ட அணியின் ஐ.கே.எம்.ஆகில்கான், எம்.ஜே.ஐ.சஹ்மி, ஏ. அர்ஹம் பர்வீஸ் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஐ.எம்.சம்லி ஸாஹி, என்.எம்.றீமாஸ், எம்.ஏ.தமீம், ஏ.எஸ்.ஏ. மிஜ்வாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தெரிவான மாணவர்களையும், இம் மாணவர்களை போட்டிக்காக பயிற்சியளித்து அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர் எம்.வை.எம்.றகீப், பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.எம். சுஹ்தான் மற்றும் ஆசிரியர் எச்.எம்.ஜெமீன் ஆகியோரை கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபீ்ர் (SLEAS) இணைப்பாடவிதான த்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எல்.எம்.தன்ஸீல் , பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர்கள், பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்
No comments: