News Just In

12/23/2020 05:10:00 PM

திருகோணமலைக்கு பண்டிகைக் காலத்தில் வருவதை தவிர்க்கவும்- அரசாங்க அதிபர் அறிவிப்பு!!


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் 70 கும் மேற்ப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த அறிவிப்பு விடுக்கபட்டுள்ளது.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுபரவல் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதேவேளை, வெளிமாவட்டங்களில் இருந்து திருகோணமலைக்கு உள்வருவதை தவிர்த்து செயற்படுமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

No comments: