இதன்படி, குருநாகல், களுத்தறை மற்றும் நாட்டின் மத்திய பகுதிகளில், இவ்வாறு கொத்தணிகள் உருவாகும் அபாயம் உள்ளதாக, சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
பி.சி.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகள், தாமதமாகின்றமையே இதற்கு காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டிகின்றார்.
கடந்த ஓரிரு நாட்களில் அடையாளங் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள், நீண்ட நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் அடிப்படையிலேயே, கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், PCR பரிசோதனைப் பெறுபேறுகள் தாமதமாகும் பட்சத்தில், புதிதாக கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் உள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: