News Just In

11/29/2020 01:37:00 PM

வில்பத்து காடழிப்பு மேற்கொள்ளப்பட்ட பிரதேசத்தை அளவை செய்யும் பணிகள் ஆரம்பம்..!!


வில்பத்து கல்லாறு உள்ளிட்ட காடழிப்பு மேற்கொள்ளப்பட்ட பிரதேசத்தைச் சூழவுள்ள பகுதிகளை அளவை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, குறித்த பணிகள் மேலும் இரண்டு மாத காலப்பகுதிகள் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வில்பத்து கல்லாறு காடழிப்பு விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: