News Just In

11/04/2020 04:16:00 PM

வான் படையின் புதிய தளபதி இன்று ஜனாதிபதியை சந்தித்தார்!!


வான் படையின் புதிய தளபதியாகப் பொறுப்பு ஏற்றுள்ள எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரண இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிப்பதியைச் சந்தித்துள்ளார். 

எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரண இலங்கை வான் படையின் 18வது விமானப் தளபதியாவார்.

1990ஆம் ஆண்டு சுப்பர் சோனிக் F7 மற்றும் 1995ஆம் ஆண்டு கபீர் விமானங்களை இலங்கைக்கு கொண்டுவந்த விமான ஓட்டியாகவும், பின்னர் கபீர் ஜெட் படையணியின் கட்டளைத் தளபதியாகவும் சுதர்ஷன பதிரண அவர்கள் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வான் படைத் தளபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் வழமையான பாரம்பரியத்திற்கு ஏற்ப ஜனாதிபதியை இன்று  அவர் சந்தித்ததுடன், நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.



No comments: