News Just In

11/08/2020 11:27:00 AM

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோளின் அடிப்படையில் ஸ்ரீமத் ம்ருத்யுஞ்ஜய யாகம்!!


நாட்டில் இருந்து கொரோனா தொற்று நீங்கி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டி பிரார்த்தனைகள் இன்று ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை ஸ்ரீமத் ம்ருத்யுஞ்ஜய யாகம் நடாத்தப்பட்டது.

நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ விடுத்துள்ள வேண்டுகோளின் அடிப்படையில் பௌத்த மத விவகார புத்தசசான அமைச்சு மற்றும் இந்துக்கலாசார திணைக்களம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் இந்த மகா யாகம் நடாத்தப்பட்டது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களினால் ஸ்ரீமத் ம்ருத்யுஞ்ஜய யாகம் நடாத்தப்பட்டது.

இந்த நாட்டில் இருந்து கொரோனா தொற்று நீங்கி நாடு சுபீட்சமான காலத்தினை அடையவேண்டும் என இதன்போது பிரார்த்தனை செய்யப்பட்டது.

இந்த ஹோம வழிபாட்டில் ஆலயத்தின் வண்ணக்கர்கள், இந்துக் கலாசார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கே.குணநாயகம் உட்பட சிலர் பங்கேற்புடன் சுகாதார வழிமுறையின் கீழ் இந்த ஸ்ரீமத் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடாத்தப்பட்டது.

நாட்டில் அனைத்து மக்களும் நோய் நொடியின்றி வாழவேண்டும், இறைவனின் அவதாரமாக உள்ள சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.






No comments: