இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சித்திரவேல், மாநகர வட்டார உறுப்பினர்கள், ஏனைய மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வீதி அபிவிருத்தி பணியின் ஆரம்பத்தில் இருதயபுரம் பாலமுருகன் 11ஆம் குறுக்கு வீதியானது 5.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யும் பணிகளை மாநகர முதல்வர் ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திராய்மடு, பனிச்சையடி படித்த பெண்கள் வீதியானது 7.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யும் பணிகளையும் மாநகர சபை முதல்வர், மாநகரசபை பிரதி முதல்வர், மற்றும் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த வீதிகள் திறந்த போட்டி மூலமாக தெரிவு செய்யப்பட்டு உலக வங்கியின் 9.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும் மாநகர சபையின் மேலதிக நிதி ஒதுக்கீட்டிலும் அபிவிருத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வானது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
























No comments: