News Just In

11/07/2020 01:41:00 PM

மட்டக்களப்பு நகரில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் தொற்று நீக்கும் பணிகள்...!!


மட்டக்களப்பு நகர்பகுதில் கொரோனா தொற்றாளர்கள் 5 பேர் கண்டிபிடிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகள் வீதிகளில் தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை (07) காலையில் முன்னெடுத்தனர்.

லொயிட்ஜ் அவனியூர் வீதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அவர்களின் வீடு மற்றும் அருகிலுள்ள வீடுகள் வீதிகள் ஒழுங்கைகள் உட்பட்ட பகுதிகளில் பொலிஸ் தண்ணீர் வீசும் வாகனத்தின் மூலம் தொற்று நீக்கி வீசும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர் .

No comments: