News Just In

11/07/2020 02:53:00 PM

மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து!!


மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து ஏற்பட்டதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது நேற்று இரவு (2020.11.06) செங்கலடியிலிருந்து வெளிச்சமின்றி கரடியனாறு நோக்கி சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரமொன்றுடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கொடுவாமடுவில் வைத்து மோதுண்டதால் ஏற்பட்டுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





No comments: